
காய்ச்சலின் காரணமாக உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில், நேற்று(புதன் கிழமை) காலை வரை சுமார் 41 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில், 117 குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் எனப்படும் மூளைக்காய்ச்சல் பரவிவருவதுடன், கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல் பரவி வருவதாக குறிப்பிடப்படுகிறது.
மேலும் குறித்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், இது குறித்து ஆராய்வதற்காக சிறப்பு நிபுணர்கள் குறித்த பகுதிகளுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
