
முயற்சியினைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
எத்தியோப்பியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியினைத் தொடர்ந்து பெனிஷான்குல்-குமுஸ் மாகாணத்தில் தொடர்ச்சியாக வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த வன்முறைச் சம்பவங்களின் போதே 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளதாக பெனிஷான்குல்-குமுஸ் மாகாண ஆளுநர் ஆஷாத்லி ஹஸன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று(புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
‘அம்ஹாரா மாகாண ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அங்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலின் தொடர்ச்சியாக, பெனிஷான்குல்-குமுஸ் மாகாணத்திலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்ஹாரா மாகாண தாக்குதலுக்குத் தலைமை வகித்த அசாமிநியூ சிகேவின் ஆதரவாளர்களே இந்தத் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.
மெடாகல் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய அந்தக் கும்பல் அம்ஹாரா மாகாணத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டது’ என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, எத்தியோப்பிய இராணுவத் தளபதி சியாரே மெகோனெனும், அம்ஹாரா மாகாண ஆளுநர் அம்பாச்யூ மெகோனெனும் வௌ;வேறு சம்பவங்களின் போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அம்ஹாரா மாகாண அரசைக் கவிழ்க்கவும், அதன் தொடர்ச்சியாக எத்தியோப்பிய அரசைக் கவிழ்க்கவும் அசாமிநியூ சிகே தலைமையிலான ஆயுதக் குழு குறித்த தாக்குதல்களை மேற்கொண்டதாக நம்பப்படுகிறது.
