ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, இதுவரை 2289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் தற்போது 1655 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் 423 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 211 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரின் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
மேலும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 330 சிங்களவர்களும் 139 தமிழர்களும் 1820 முஸ்லிம்களும் அடங்குகின்றனர்.
ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் ஆதரவுடன் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சுமார் 250 இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






