LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, May 14, 2019

WhatsApp மூலம் ஹக்கர்கள் ஊடுருவி, தகவல்களைத் திருட முயற்சி

ஸ்மார்ட் மொபைல்களில் நாம் அதிகமாகப் பயன்படுத்தும் WhatsApp செயலியினை ஹக்கர்கள் ஊடுருவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இன்றைய உலகில், உலகம் முழுவதும் தகவல் தொடர்புக்காக பலரும் பயன்படுத்தும் இந்த App ஊடாக உள்நுழையும் ஹக்கர்கள் பயனர்களுக்குத் தெரியாமலே அவர்களின் தகவல்கள் அனைத்தையும் திருடுவதுடன் அந்த மொபைல்போனை ரிமோட் மூலம்  கண்காணிக்கவும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே தெரியாத இலக்கங்களில் இருந்து WhatsApp குறுந்தகவல் வருகின்றபோது அதனைத் திறக்கவேண்டாம் என பயனர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஹக்கர்களின் தாக்குதலானது இந்தமாதத் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கும் பைனான்சியல் ரைம்ஸ் இந்தத் தாக்குதலானது இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனம் (NSO Group)  ஒன்றினால் வடிவமைக்கப்பட்டது என்றும் கூறியுள்ளது.

இதன் காரணமாக WhatsApp நிறுவனமானது உலகம் முழுவதுமுள்ள தனது 1.5 பில்லியன் பயனர்கள் தங்களது WhatsApp செயலியினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இதைத் தடுப்பதற்கான மென்பொருள் ஒன்று WhatsApp நிறுவனத்தால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7