
கிறிஸ்ட்சேர்ச்சில் அமைந்துள்ள இரண்டு மசூதிகள் மீது கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டு தாக்குதல்களின்போது 51 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்தனர்.
தனது விஜயத்தின்போது தாக்குதல் நடத்தப்பட்ட மசூதிகளில் ஒன்றுக்கு விஜயம் செய்த ஐ.நா செயலாளர் அங்கு தாக்குதல்களில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் இஸ்லாமியத் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
மக்களிடையே வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாகவும் சமூக ஊடகங்கள் அதை வெளிப்படுத்துவதற்கான சாதனங்களாக பயன்படுத்தப்படுவதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. செயலர் தெரிவித்துள்ளார்.
மேலும் வெறுப்புணர்வை எதிர்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அதற்கான உலகளாவிய திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
