
நான்கு சூடான் ஆர்ப்பாட்டக்காரர்களும், பாதுகாப்பு படை அதிகாரியொருவருமே இதன்போது உயிரிழந்துள்ளனர்.
முழு மக்களாட்சிக்கு அழைப்பு விடுத்து இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில இந்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன.
உயிரிழப்புகளுக்கு படையினரே பொறுப்பு கூற வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், படையினர் இனந்தெரியாத நபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
சூடானில் ஜனாதிபதியாகவிருந்த ஒமர் அல்-பஷீர் கடந்த மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, சூடானில் இராணுவ ஆட்சி நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
