
ஆளுங்கட்சியுடனான எதிர்க்கட்சியின் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளில் தொழிற்கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியுமா என்பதை கண்டறிவதற்காகவே இந்த பயணத்தை பிரெக்ஸிற் பேச்சுவார்த்தையாளர் மேற்கொண்டுள்ளார்.
ஆளுங்கட்சியுடன் எட்டப்படும் எந்தவொரு உடன்படிக்கையும் பிரெக்ஸிற் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமென தொழிற்கட்சியின் சார்பில் பங்கெடுத்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரெக்சிற்றுக்கு பின்னரான பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான எதிர்காலஉறவுகள் குறித்து இந்த அரசியல் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கமும் தொழிற்கட்சியும் உடன்படிக்கை ஒன்றை எட்டும்பட்சத்தில் எவ்வளவு விரைவாக அரசியல் பிரகடனத்தில் மாற்றங்களை கொண்டுவர முடியும் என்பது குறித்து றொபின்ஸ் இப்பயணத்தின்போது ஆராயவுள்ளார்.
