LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, May 22, 2019

இலங்கையின் விசாரணைக் களத்தில் FBI உள்ளிட்ட 9 சர்வதேச குழுக்கள்

FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புக்களின் குழு இலங்கையில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக  களத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த குழுக்கள் இலங்கையில் இருந்தவாறே, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு இலங்கை விசாரணையாளர்களுடன் களத்தில் உள்ள வெளிநாட்டு விசாரணை நிறுவனங்களில் எப்.பி.ஐ., ஸ்கொட்லன்ட் யார்ட், அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் நியூஸிலாந்து ஆகிய சிறப்பு விசாரணையாளர்கள் இணைந்து செயற்படுவதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாருடன் இலங்கை மிக நெருக்கமாக செயற்படுவதாகவும், பயங்கரவாதிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த தகவல்களை பறிமாற இன்டர்போலுடன் இணைந்து 24 மணி நேர நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் 15 குழுக்கள் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளுக்கு இந்த 9 வெளிநாட்டு விசாரணை நிறுவங்களும் தொழில்நுட்ப ரீதியாகவும் ஏனைய உதவிகளையும் வழங்குகின்றன.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7