
குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் 42 வயதுடைய சேகு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற குறித்த வைத்தியர் இன்று (சனிக்கிழமை) கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பொலிஸ் விசாரணையைத் தொடர்ந்து அவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
குறித்த வைத்தியரின் சொத்து விபரம் குறித்து விசாரணை செய்வதற்காக அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனிடையே, குறித்த வைத்தியர், 8,000 கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
