
கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே பிரதமர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னரான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு விளக்கமளித்தார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் ஆகியன குறித்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வது குறித்து பல்வேறு நாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதையடுத்து, இலங்கையின் சுற்றுலாத் துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
