
ருக்கு உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வழமைக்கு திரும்பும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கான இலங்கை பிரதிநிதி Tim Sutton நேற்று (புதன்கிழமை) எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார். விஜேராம மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது, மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பாக மாணவர்களையும், பெற்றோரையும் ஊக்குவிக்க வேண்டும் என ஐ.நா. பிரதிநிதி வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர், நாட்டின் பாதுகாப்பு நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது என்ற உத்தரவாதம் அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டும். அதன்போது மாணவர்களின் வருகை வழமைக்கு திரும்பி பாடசாலை நடவடிக்கைகளும் ஒழுங்காக நடைபெறும் எனத் தெரிவித்தார்.
