
னவாத மோதலை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தொடர்ந்து சிங்கள – முஸ்லிம் மக்களிடையே பிரச்சினை தோற்றம் பெறாமை அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவ வெற்றிக் கொண்டாட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக கண்டியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசாங்கத்திற்கு தற்போது மக்கள் பலம் இல்லை. அரசாங்கத்தின் எந்த தரப்பினருக்கும் தேர்தலை வெற்றிக் கொள்வதற்கான ஆற்றல் இல்லை. அதனால் 83ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரம் போன்றதொரு பிரச்சினையை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
30 ஆண்டுகால யுத்தத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த இராணுவத்தினருக்கு இன்று சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சட்டங்களின் கீழ் தீவிரவாதிகள் அன்றி இராணுவத்தினரே தண்டனைக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
