தொடர்பாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக பா.ஜ.க. முறைப்பாடு தமிழக தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
பிரதமர் மோடியின் உத்தரவின் பேரிலேயே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததாக மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பாகவே பா.ஜ.க. முறைப்பாடளித்துள்ளது.
பா.ஜ.க.வின் ‘யுவ மோர்ச்சா’ இளைஞர் அணி, தமிழ்நாடு தேர்தல் ஆணையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த முறைப்பாட்டை அளித்தது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றபோது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இச்சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியின் உத்தரவின் பேரிலேயே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததாக பேசியிருந்தார்.
இதையடுத்து, பிரதமருக்கு எதிராக அவதூறான தகவலை பரப்பியதாகவும், இதற்காக ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் பா.ஜ.க.வால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.