அரங்கேற்றிவந்த பயங்கரவாதிகளின் புதிய இலக்கு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாதிகள் தற்போது கொழும்பிலுள்ள பாலங்களை இலக்கு வைத்திருப்பதாக பொலிஸார் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இவ்வாறான தாக்குதல்கள் தொடர்பாக குறிப்பிடத்தக்க புலனாய்வு தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் அதிர்ச்சியிலிருந்து சற்று மீண்டு மக்கள் வழமைக்கு திரும்பி வருகின்ற நிலையில் இவ்வாறானதொரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.