LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, May 4, 2019

தமிழகத்தில் சில நாட்களுக்கு சுட்டெரிக்கும் வெயில்!

தமிழகத்தில் சில நாட்களுக்கு சுட்டெரிக்கும் வெயில்
தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அவ்வகையில், வரும் திங்கள் வரை தமிழகத்தின் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் வெப்ப சூழ்நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இன்னும் ‘கத்திரி’, அல்லது அக்னி நட்சத்திரம் என்று குறிப்பிடப்படும் நாட்கள் வரவில்லை. ஆனால் அதற்கு முன்பே சென்னை நகரம் வெயிலின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை நண்பகல் சென்னை நுங்கம்பாக்கத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெயிலும் மீனம்பாக்கத்தில் 42 டிகிரி செல்சியஸ் வெயிலும் பதிவாகின. 2ஆம் நாளாக தொடர்ந்து சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் பகல் வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸைக் கடந்து சென்றுள்ளது.

பொதுவாக மே மாதம் 4ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை உச்சபட்ச கோடைக்காலம் என்று அறியப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் வரை தமிழகத்தின் சென்னை, வேலூர், திருவள்ளூர், சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்ப அலை நிலை நீடிக்கும் என்கிறது வானிலை ஆய்வு மையம்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் உதவி தலைமை இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது, ஃபானி புயல் தமிழகத்திலிருந்து முற்றிலும் விலகிச் சென்றுவிட்டது. இது போகும்போது அத்தனை ஈரப்பதத்தையும் உறிஞ்சி எடுத்துச் சென்றுவிட்டது. இதனையடுத்து ஒருமாதிரியான வறண்ட மேற்குக் காற்று வீசத் தொடங்கியுள்ளது. மேகமற்ற வானம், பிரகாசமான சூரியன் ஆகியவற்றினால் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தரைக்காற்று வலுவாகியுள்ளதால் இதனை குளிர்ப்படுத்தும் கடற்காற்றின் குறுக்கீடு தாமதமாகியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு நகரத்தில் இதே அசௌகரிய வெப்ப நிலை தொடரும். 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை நீடிக்கும்” என்று கூறியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7