
ணாகலில் விசாரணையை நடத்தும்பொருட்டு விஷேட சி.ஐ.டி. குழுவொன்று குருணாகல் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை தொடர்பாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், சட்ட விரோத கருத்தடை விவகாரம் தொடர்பாக குருணாகலில் நூற்றுக்கணக்கான பெண்கள், வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகளை செய்துவருகின்றனர். இதுகுறித்து விரிவான விசாரணையை நடத்துவதற்காக குறித்த சி.ஐ.டி. குழு அங்கு சென்றுள்ளது.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேராவின் தலைமையில் அனுப்பட்டுள்ள இந்தக் குழு குருணாகலுக்கு சென்று தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அவ்வகையில் இன்று மாலை வரை சுமார் 35 வாக்குமூலங்களை சி.ஐ.டி. குழு பதிவு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
இதனிடையே வைத்தியர் ஷாபி, கருத்தடை செய்துள்ளாரா என்பதை பரிசீலிக்குமாறு வலியுறுத்தி மாலை வரை 238 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதில் 202 முறைப்பாடுகள் குருணாகல் போதனா வைத்தியசாலைக்கும், தம்புள்ளை ஆதார வைத்தியசாலை மற்றும் கலேவல தள வைத்தியசாலைகளுக்கு 36 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
