ர் பதவியிலிருந்து பிரபா கணேசன் இராஜினாமா செய்ததாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வருட காலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழுள்ள அமைச்சின் ஊடான அபிவிருத்தி கருத்திட்ட பணிப்பாளராக கடமையாற்றிய ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர்பிரபா கணேசன், தனது பதவியை இராஜினாமா செய்ததாக இக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரபா கணேசன் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பிவைத்தார்.
அதில், தான் வன்னி மாவட்ட கருத்திட்ட பணிப்பாளர் பதவியின் ஊடாக பாரிய அளவில் மக்களுக்கான சேவையினை ஆற்றக்கூடியதாக எவ்விதமான நிதி ஒதுக்கீடுகளும் சரியான முறையிலே வழங்கப்படவில்லை குற்றஞ்சாட்டியுளள்ளார்.
அத்துடன், கடந்த ஆண்டு நான் கொடுத்த பல வேலைத்திட்டங்களில் ஒரு சில வேலைத்திட்டங்களே நடைமுறைப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், இது குறித்து கடந்த ஆண்டு பணிப்பாளர்கள் கூட்டத்தில் அதிருப்தியை தெரிவித்த போது, 2019ஆம் ஆண்டு பாரிய அளவில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்ற உத்தரவாதம் மேலதிக செயலாளரின் ஊடாக தனக்கு வழங்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பல கோடி ரூபாய்களுக்கான வேலைத்திட்டங்களை பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். ஆனால் இது குறித்து எந்தகவனமும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜனநாயக மக்கள் காங்கிரஸையே வன்னி மாவட்டத்தில் வளர்த்தெடுப்பதாகவும், ஜனாதிபதி சம்பந்தமான எந்தவொரு விடயத்தையும் மக்களிடம் கொண்டு செல்வதில்லை எனவும் தன்மீது குற்றஞ்சுமத்தப்பட்ட நிலையில், குறித்த பதவியிலிருந்து தான் விலகுவதாக பிரபாகணேசன் அறிவித்துள்ளார்.
