
37 வருடங்களுக்கு பின்னர் வட கொரியாவில் இவ்வாறான கடும் வறட்சி நிலவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்காரணமாக வடகொரியாவைச் சேர்ந்த 10 மில்லியனுக்கும் அதிகமானோர் அவசர உணவுத்தேவையை எதிர்நோக்கியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
நாளாந்தம் ஒருவர் வடகொரியாவில் 300 கிராம் உணவை மாத்திரமே உட்கொண்டு உயிர்வாழ்வதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
வட கொரியா முழுவதும் கடந்த 5 மாத காலத்தில் 54.4 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் 1982ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகிய குறைந்தளவு மழைவீழ்ச்சி எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, வடகொரியாவில், 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும்வரட்சி காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
