
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனைத் தெரிவித்துள்ளார்.
மீள்சுழற்சிக்கு உகந்த பிளாஸ்டிக் கழிவுகள் என பொய்யாகக் குறிப்பிடப்பட்ட வீட்டுக் கழிவுப் பொருட்கள் சுமார் 100 கொள்கலன்களில் அடைக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவிலிருந்து பிலிப்பைன்ஸிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக இம்மாதம் 15 ஆம் திகதி வரை கனடாவிற்கு பிலிப்பைன்ஸ் கால அவகாசம் வழங்கியிருந்தது.
இதனை நிறைவேற்ற கனடா தவறியதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சுமத்தியதுடன், நேற்று(வியாழக்கிழமை) கனடாவுக்கான தனது தூதர்களை மீளப்பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் கழிவுப் பொருள் கொள்கலன் சர்ச்சை தொடர்பாக கடந்த சில மாதங்களாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கனடியப் பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
