
சர்வதேச மன்னிப்பு சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ ஆதரவுப் படைகளினால் வெனிசுவேலாவில் சட்டவிரோத மரணதண்டனை மற்றும் தன்னிச்சையான தடுப்புக் காவல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த சபை குற்றம் சுமத்தியுள்ளது.
ஒபேக் அங்கத்துவ நாடான வெனிசூலாவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரான ஜூவன் கைடோ அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக தன்னை அறிவிக்குமாறு தெரிவித்ததுடன், மதுரோவின் அரசாங்கம் இது தொடர்பாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் மீண்டும் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
அமெரிக்கா மற்றும் மேலும் பல இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் 50க்கும் மேற்பட்ட நாடுகள் வெனிசுவேலாவில் ஜூவன் கைடோவின் தலைமைப் பதவியை ஆதரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
