
பிரெக்ஸிற் சமரசத்தை எட்டும் நோக்கத்துடன் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் கடந்த ஏழுவாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து விட்டதாக தொழிற்கட்சி இன்று அறிவித்தது.
அரசாங்கத்தின் நிலையற்ற தன்மை காரணமாகவும், சில விடயங்களில் சமரசம் செய்யமுடியாத காரணத்தாலும் பேச்சுவார்த்தைகளை முடிவுக்கு கொண்டு வருவதாக தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் இரு பிரதான கட்சிகளின் இந்தத் தீர்மானம் பிரெக்ஸிற் விடயத்தில் மிகவும் தவறான முன்னேற்றமாக அமையுமென வராத்கர் தெரிவித்துள்ளார்.
