சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக முரண்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.சீனா மீது விதிக்கப்பட்டுள்ள வரியால் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு உதவும் வகையில் 16 பில்லியன் டொலர் உதவித் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.
அதன் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால் அது சாத்தியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.





