
சீன ஆட்சிக்குட்பட்ட ஹொங்கொங்கிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தினால் இக்குறிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட இச்சட்டமூலத்தில் தனிநபர்களை விசாரணைகளுக்காக சீனாவிற்கு அனுப்பி வைக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்புதிய சட்டமூலமானது ஹொங்கொங்கின் சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குறியாக்கும் என்றும் முறைகேடான விசாரணைகளுக்கு வழிவகுக்கும் எனவும் வெளிநாட்டு அரசாங்கங்கள், சட்ட மற்றும் வணிக குழுக்கள் உள்ளிட்ட விமர்சகர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
