மக்கள் தீர்ப்புக்கு நிறம் கொடுக்க விரும்பவில்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அத்துடன், மோடியை மக்கள் பிரதமராக ஏற்றுக்கொண்டு விட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அந்தவகையில் சுமார் 340 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையை நிறுவியுள்ளது.
இதேவேளை, காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் 90இல் இருந்து 100 வரையான தொகுதிகளையே கைப்பற்றும் என முன்னிலை விபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





