
அத்துடன் மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள தி.மு.க. கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அண்ணா அறிவாலயம் சென்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்தார்.
