
அத்துடன், தேசிய கொடியை ஒத்த கொடிகளை வைத்துள்ள அரசியல் கட்சிகள் குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘மதம் மற்றும் இனம் தொடர்பான வாசகங்களை வைத்துள்ள கட்சிகளின் பெயர்களை தேர்தல் ஆணையம் ஆய்வுசெய்ய வேண்டும்.
இவற்றை மாற்றுவதற்கு குறித்த கட்சிகளுக்கு 3 மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். குறித்த கால அவகாசத்திற்குள் மாற்றாத கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்.
அத்துடன் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ஹிந்து சேனா ஆகிய கட்சிகளின் பெயர்களில் மதம் பற்றிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு மதம் சார்ந்த கட்சிகளின் பெயர்களையும் மாற்றவேண்டும்’ என அவர் கோரியுள்ளார்.
