
சர்ச்சைக்குரிய கருத்தையடுத்து, நடிகர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பே திங்களன்று அறிவிக்கப்படவுள்ளது.
அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் பிரசாரக் கூட்டத்தில் “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என கமல்ஹாசன் பேசியிருந்தார்.
இதையடுத்து, கமல்ஹாசனுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் வழங்கியிருந்தனர்.
அந்தவகையில், கமல்ஹாசன் மீது 76 முறைப்பாடுகள் வழங்கப்பட்டதாக அரசு தெரிவித்திருந்தது.
இதன் பின்னணியிலேயே, கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்தார். இந்த மனு மீதே உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கவுள்ளது.
