
இது குறித்து தேர்தல் ஆணையம் குறிப்பிடுகையில், 435003 பேருக்கு தபால் வாக்கிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட நிலையில் அவற்றுள் 12915 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் 2 நாட்களில் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் தபால் வாக்குகள் தொடர்பாக குழப்பத்தை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
