
வாலையும் தலையையும் கத்தரித்து போட்டீர்களேயானால் யாரையும் யாரும் திட்டுவது போல் சித்திரிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்தவிடயம் குறித்து அரசியல்கட்சிகளோ அல்லது மக்களோ விமர்சிப்பதற்கு தற்போது உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்தவிடயம் சரித்திரஉண்மை என குறிப்பிடும் கமல்ஹாசன், பிரதமர் நரேந்திர மோடிக்கு தான் பதில் கூறுவதைவிட சரித்திரம் பதில்கூறும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும் ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
