அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள உளவுக் குற்றச்சாட்டுகளுக்காக விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்குமாறு உள்துறை அமைச்சர் சஜித் ஜாவிட்டிடம் விக்கிலீக்ஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.தற்போது பிரித்தானிய சிறையிலடைக்கப்பட்டுள்ள அசாஞ் மீது ராஜாங்க ரகசியங்களை வெளியிட்ட வழக்கில் புதிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை முன்வைத்துள்ளது.
பிரித்தானியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டிய கடமை சஜித் ஜாவிட்-க்கு உள்ளது என தெரிவித்துள்ள விக்கிலீக்ஸ் நிறுவனம், ஜூலியன் அசாஞ் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் பத்திரிகை சுதந்திரம் மீதான பாரிய தாக்குதல் எனவும் இதை தடுக்கக்கூடிய சக்தி இப்போது பிரித்தானிய உள்துறை அமைச்சரின் கைகளிலேயே தங்கியுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





