
கொன்சர்வேற்றிவ் கட்சி தலைவர் பதவியிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் வரும் ஜூன் 7 ஆம் திகதி விலகுவதாக பிரதமர் தெரேசா மே இன்று காலை அறிவித்துள்ளார்.
பிரதமர் தெரேசா மே-யின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த மக்ரோன், பிரெக்ஸிற் விடயத்தில் பிரதமர் தெரேசா மே மிகவும் தைரியமான முறையில் செயலாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
ஆனாலும் ஐரோப்பிய ஒன்றியம் ஒழுங்கான முறையில் செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தானிய அரசானகத்திடமிருந்து பிரெக்ஸிற் தொடர்பான தெளிவு வழங்கப்பட வேண்டியது அவசியமெனவும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
