LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, May 15, 2019

பொதுமக்கள் வழங்கிய தகவல் – பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் காத்தான்குடியில் கைது

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய
பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மொஹமட் ஆதம் என்பவர் கைதாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொச்சிக்கடை தேவாலயத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலை தாக்குதலை அடுத்து பொலிஸார் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு அந்த நபர் தொடர்பாக தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அந்தவகையில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்தநபர் இன்று (புதன்கிழமை) புதிய காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்துவதற்கான வாகனத்தை கொள்வனவு செய்ததுடன், அதன் இருக்கைகளையும் அமைத்துக் கொடுத்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காத்தான்குடியில் இன்று இடம்பெற்ற சுற்றிவளைப்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7