LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, May 15, 2019

முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலைமைத்துவ குறைபாடே நாட்டின் பிரச்சினைக்கு காரணம்: அநுர

முஸ்லிம் அரசியல்வாதிகள், தமது சமூகத்திற்கு
ஒழுங்கான தலைமைத்துவத்தை வழங்கத் தவறியமையே நாட்டின் பிரச்சினைகளுக்கு காரணம் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எமது நாட்டில் உருவாகியிருக்கும் பயங்கரவாதத்தை இலகுவாக அழித்துவிட முடியாது என்பது எமக்கு தெளிவாக தெரிகிறது.

ஒரு சிலர் தற்கொலைத் தாக்குதலில் இறந்தாலும், இதற்கு உதவிய பலர் தற்போது கைது செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் புலனாய்வுப் பிரிவு பலப்படுத்தப்பட்டிருந்தது. இன்று அவ்வாறு இல்லை. புலனாய்வுப் பிரிவினரை பலப்படுத்தாமல் இந்த பயங்கரவாதத்தை ஒருபோதும் அழித்துவிட முடியாது.

கடந்த காலங்களில் இந்த அரசாங்கம் இராணுவத்தின் புலனாய்வுத் துறையினரை பயன்படுத்தவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.

இதன்மூலம் அரசாங்கத்தின் இயலாமையே வெளிப்படுகிறது. இந்த பயங்கரவாதம் சர்வதேச பயங்கரவாதம் என்று பிரதமர் கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால், இதற்கு சர்வதேசத்தின் ஆதரவு இருந்தாலும் இலங்கையில் வளர்ச்சியடைந்த பயங்கரவாதமாகும்.

குழப்பங்களை ஏற்படுத்துவதால் மட்டும் இதனை நிறுத்திவிட முடியாது. எனவே, அனைவரும் அமைதியாகவும் ஐக்கியமாகவும் செயற்பட வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகும்.

இதனை அனைத்து அரசியல்வாதிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும். விசேடமாக முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்துக்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

தமது சமூகத்திற்கு இவர்கள் சரியான தலைமைத்துவத்தை வழங்கத் தவறியமையாலேயே நாட்டுக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7