
மதுபானசாலைகளையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் மதுபானசாலைகள் அனைத்தையும் மூடுமாறு மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி ஆணையாளர் கப்பில குமாரசிங்க இந்த அறிவிப்பை இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளார்.
பெளத்த மக்களின் புனித வெசாக் பண்டிகை ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் வெரும் பெளர்ணமி தினத்தில் கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் இம்முறை, வரும் 19ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் வெசாக் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் காரணமாக, இம்முறை வெசாக் பண்டிகைக்கான முன்னேற்பாடுகள் சோபையிழந்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது.
இதனிடையே, நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, வெசாக் தினத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடும் வகையிலான நிகழ்வுகளை மேற்கொள்ளவேண்டாம் என பௌத்த மதத்தின் நான்கு பீடங்களைச் சேர்ந்த மஹாநாயக்கர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
