LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, May 19, 2019

புட்டின் – ட்ரம்ப் சந்திப்பு: அமெரிக்க முடிவிற்கு காத்திருக்கிறது கிரெம்ளின்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கும் இடையிலான சந்திப்பு தொடர்பான அமெரிக்காவின் முடிவிற்காக தொடர்ந்தும் காத்திருப்பதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

மேலும் இரு தலைவர்கள் சந்திப்பு தொடர்பாக இதுவரை வொஷிங்டன் உறுதியான முடிவை எடுக்கவில்லை என்றும் கிரெம்ளின் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பிற்கான தனது விருப்பத்தை பற்றி பேசியிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆனால் ஒசாகாவில் நடைபெற்ற G-20 கூட்டத்திற்குப் பின்னர் இந்த சந்திப்பிற்கான ஏற்பாடு செய்வது பற்றி எந்தவொரு உறுதியான திட்டங்களையும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ முன்வைக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7