பிரித்தானியாவில் அதிகரிக்கும் குடியேற்றவாசிகளின்எண்ணிக்கை காரணமாக புதிய வீடுகள் கட்டப்பட வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை இதே அளவில் தொடர்ந்தால் 20 ஆண்டுகளில் 4 மில்லியன் புதிய வீடுகள் கட்டப்பட வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகின்றது.
தற்போது, பிரித்தானியாவில் 23.4 மில்லியன் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
ஆண்டிற்கு 2,15,000 பேர் குடியேறி வருகின்றனர். இதே நிலையில் மக்கள் தொகை அதிகரித்தால் 2041ஆம் ஆண்டு 27.6 மில்லியன் அதிகமான குடும்பங்களுக்கு வீடு தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வீடுகளின் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டிற்கு 2,00,000 புதிய வீடுகள் கட்ட வேண்டும் எனவும், கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 1,65,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





