டன் விசேட கலந்துரையாடலொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஈடுபட்டுள்ளார்.
இரண்டாவது முறையாகவும் இந்தியாவின் பிரமதராக நேற்று பதவியேற்ற நரேந்திர மோடியின் குறித்த விழாவுக்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரதமர்களும் வந்திருந்தனர். பின்னர் தங்களது வாழ்த்துக்களையும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமித், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மொரிஷியஸ் பிரதமர் பிரவின்ட் குமார், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி, பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த மோடி, விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.






