பகிரங்கப்படுத்துவதில், நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவிக்கையில், “தெரிவுக்குழு விசாரணைகளை, ஊடகங்கள் பார்வையில் மேற்கொண்டமையானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றுகூறப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை நாம் அவ்வாறான எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளவில்லை.
தகவல் அறியும் சட்டத்தின் 5ஆம் பிரிவில், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரதூரமானது என்று கருதப்படும் ஒரு விடயம் தொடர்பிலான தகவல்களை வழங்காமல் இருக்க முடியும். நாம் இதனை பிரதானமாகக் கருத்திற்கொண்டே இந்த செயற்பாட்டை மேற்கொண்டோம். அந்த சரத்தில் கூறப்பட்டதைவிட பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கியே நாம் செயற்பட்டோம்.
முதல் அமர்வின்போது, தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கிய இருவரும் தேசிய பாதுகாப்பு குறித்து சிறப்பான அறிவுத்திறன் கொண்டவர்கள். அவர்களிடம் நாம் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தோம். அதாவது, சாட்சியத்தின்போது ஏதேனும் ஒரு விடயம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கருதினால் அதனை வெளிப்படுத்த வேண்டாம் என்று கூறியிருந்தோம்.
பாதுகாப்புச் செயலாளர் பல்வேறு விடயங்கள் குறித்து தனியாக கூறுவதாகக் கூறியுள்ளார். இதனை நாம் அத்தருணத்தின்போது வினவவில்லை.
இதனை அனைத்து ஊடகங்களும் அவதானித்திருக்கும். பாதுகாப்புத் தரப்பின் பிரதானிகள் யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், பாதுகாப்பு தரப்பிலுள்ள முக்கிய அதிகாரிகள் யார் என மக்களுக்குத் தெரியாது. இவ்வாறான ஆயிரக்கணக்கான அதிகாரிகள் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.






