
இதற்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையில், சட்டவிரோத தடுப்பு ஆணையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணையம், விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை தொடர போதுமான காரணங்கள் உள்ளதா, இல்லையா என்பது பற்றி ஆராயவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பல்வேறு ஈழ விடுதலை அமைப்புக்களும் 80களின் நடுப்பகுதியில் தங்களுடைய செயற்பாடுகளுக்கான பின்தளமாக இந்தியாவை பயன்படுத்தி வந்தன. இந்தியாவினால் ஆயுதப் பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தன.
எனினும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் தமிழகத்தின் ஸ்ரீ பெரும்புத்துார் என்னும் இடத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தவேளை தற்கொலை குண்டுதாரி ஒருவரினால் கொலை செய்யப்பட்டதையடுத்து இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டிருந்தது.
குறித்த தடையே தற்போது வரை தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
