LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, May 28, 2019

நேர்கொண்ட பார்வை : கழுகின் ஔிப்படத்தால் புகழ் பெற்ற கனடா ஔிப்படக்கலைஞர்!

தொழில்முறை சாராத கனடா ஔிப்படக் கலைஞர் ஒருவர் எடுத்த பருந்தின் ஔிப்படம் ஒன்று சர்வதேச அளவில் அவருக்கு பெயரையும், புகழையும் பெற்று தந்துள்ளது. இதன் காரணமாக தாம் நெகிழ்ந்து போயிருப்பதாக அந்த புகைப்பட கலைஞர் தெரிவித்துள்ளார்.

கனடாவை சேர்ந்த ஸ்டீவ் பைரொ என்பவர் ‘கனேடியன் ராப்டர்’ சரணாலயத்தில் ஒரு பருந்தின் ஔிப்படத்தையும், காணொளியையும் பதிவு செய்தார்.

அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த போது ஆரம்பத்தில் சாதாரணமாக அனைவராலும் விரும்பப்பட்டதுடன், மீளப் பகிரப்பட்டது. அந்த ஔிப்படம் பின்னர் எதிர்பாராத விதமாக வைரலாக பரவியது.

ஔிப்படங்களை பதிவு செய்த தினத்தில் அங்கு ஸ்டீவ் நூற்றுக்கணக்கான ஔிப்படங்களை எடுத்திருந்தார். அதில் ஒன்றுதான் இந்த கழுகின் ​நேர்கொண்ட பார்வை.

நேர்கொண்ட பார்வையுடன், இரண்டு இறக்கைகளையும் தண்ணீரில் படும்படியாக அந்த ஔிப்படத்தில் கழுகு பறக்கின்றது. ‘ரெட் இட்’ (Red it) வலைத்தளத்தில் முன் பக்கத்தில் இந்த ஔிப்படம் முதலில் பகிரப்பட்டது.

விளையாட்டு வினையாகும் என்ற வாசகத்தின் அடிப்படையில் இங்கு இவருக்கு விளையாட்டு புகழாக மாறியிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு பொழுதுபோக்காகவே ஔிப்படங்களை எடுக்க ஆரம்பித்ததாக ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.

இயற்கை சார்ந்த ஔிப்படங்கள், நகரங்களின் அழகை வர்ணிக்கும் ஔிப்படங்கள் என்பவற்றை அவர் பதிவு செய்த ஆரம்பித்தார். அந்த வகையில், பறவைகளை ஔிப்படம் எடுப்பதில் தமக்கு அலாதி பிரியம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

“பறவைகள் என்னை அடிமையாக்குகின்றன. பறவைகளிடம் ஏதோவொரு ஈர்ப்பு சக்தி உள்ளது. அவை இரைபிடிக்கும் பாங்கு, குழந்தைகள் போன்று விளையாடும் அதன் தன்மை ஆகியவை என்னை ஈர்க்க செய்கின்றன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குழந்தையின் கண்ணோட்டத்தில் இந்த உலகத்தை காண ஔிப்படக் கலை தூண்டுவதாக ஸ்டீவ் கருதுகிறார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7