
குறித்த பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரு வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதியதில் இவ்விபத்து சம்பவித்திருந்தது.
விபத்தில் காயமடைந்த ஆறு பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாகக் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்தில் சிக்கிய 2 வயது குழந்தை சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ள அதேவேளை, 8 வயது சிறுமி ஆபத்தற்ற நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்திற்கான காரணம் போதையில் வாகனம் செலுத்தியமையோ, அதிகூடிய வேகமோ இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்ப
