ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான வை.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றியுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது. அதேசமயம், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை இழக்கிறது.
ராஜகசேகர் ரெட்டியிடம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை இழந்த சந்திரபாபு நாயுடு, தற்போது அவரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியைப் பறிகொடுக்கிறார்.
மொத்தம் உள்ள 174 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான வை.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 108 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி 21 இடங்களிலும், பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலிலும் வை.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
பா.ஜ.க. கூட்டணியில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்துவிட்டு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனக்கூறி முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இருந்து வெளியேறினார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மத்தியில் பா.ஜ.க.வுக்கு மாற்றாக ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்சித் தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். ஆனால் அனைத்தும் தற்போது வீணாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
