
அதன்படி, கடலோர காவற்படையை புதுப்பிப்பதற்கு 11.7 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்யவுள்ளதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
வான்கூவரில் வைத்து நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் ட்ரூடோ இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இரு ஐஸ்பிறேக்கர்கள் உள்ளிட்ட 18 புதிய கப்பல்களை அமைப்பதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
இரு ஐஸ்பிறேக்கர்கள் கிழக்கு கரையிலுள்ள ஹலிஃபாக்ஸ் ஈர்விங் கப்பல் கட்டுமானத்தளத்தில் அமைக்கப்படவுள்ளன. ஏனைய 16 பல்நோக்கு கப்பல்கள் மேற்கு கரையிலுள்ள வான்கூவர் கப்பற்தளத்தில் அமைக்கப்படவுள்ளன.
