
இருந்ததன் விளைவாகவே நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும், தீவிரவாதிகளைப் போல இவர்களும் இந்த விடயத்தில் குற்றவாளிகளாகவே கருதப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் நிலைமை தற்போது இயல்பு நிலைமைக்கு திரும்பிவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், மக்கள் அச்சத்துடன் தான் இருக்கிறார்கள். அரசாங்கம் இன்னும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியுள்ளது என்பதே இதன் ஊடாக தெரிகிறது.
இதனை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்கிறார்கள். இதுவொரு இயற்கை அனர்த்தமாக இருந்தால் நாம் அமைதியாக இருப்போம். எனினும், இது திட்டமிடப்பட்ட தாக்குதலாகும். இதன் பின்னணியில் அரசியல் நோக்கமொன்று உள்ளது. இதனை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது.
இஸ்லாம் அடிப்படைவாதிகளால் தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரியும். இதில் இரண்டு தரப்பினர் தொடர்புபட்டுள்ளார்கள். நேரடியாக தொடர்புபட்ட தீவிரவாதிகளும், புலனாய்வுத்துறையினர் தகவல் வழங்கியும் நடவடிக்கை எடுக்கத் தவறியவர்களும் தான் இந்த குண்டுத் தாக்குதலின் பிரதான குற்றவாளிகள்.
தாக்குதலை தடுக்கத் தவறிய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைவரும் குற்றவாளிகள் தான். அரசியல் நோக்கத்திற்காகத் தான் இவர்கள் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த இருவரும் ஜனாதிபதிக் கனவில் இருந்தமையாலேயே நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அனைத்து விடயங்களிலும் இவர்கள் இருவரும் போட்டி மனப்பான்மையுடன்தான் செயற்பட்டார்கள்.
இன அதிகாரப் போட்டியால்தான் இவ்வளவுப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. புலனாய்வுத் துறையினர் அரசியல் தேவைக்காகத் தான் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். எனவே, இந்த குண்டுத் தாக்குதலுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பொறுப்பேற்றே ஆகவேண்டும்” என்று தெரிவித்தார்.
