LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, May 19, 2019

இராணுவத்தின் பெறுமதியை இலங்கை மக்கள் மீண்டும் உணர்ந்துள்ளனர் – மஹிந்த

இராணுவத்தினரின் உண்மையான பெறுமதியை இலங்கை மக்கள் மீண்டும் உணர்ந்திருப்பதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “இந்த நாட்டின் ராணுவத்தின் உண்மையான பெறுமதி மக்களுக்கு மீண்டும் நினைவுக்கு வந்திருக்கின்றது.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் பெற்றுத் தந்த அமைதியான சூழ்நிலை குறித்து பலருக்கு நினைவில்லாமல் போயிருக்கின்றது. அந்த இராணுவத்தினர் சிறையில் இருந்த போது, இங்கு என்ன நடக்கப் போகின்றது என்று நாங்கள் மிகவும் வருந்தினோம்.

இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களின் தியாகங்களை இழிவுபடுத்துவதற்கு பலர் முயன்றனர். எனவே, இராணுவத்தினரை ஏற்றுக்கொள்ளாததாலும், அவர்களின் சேவையை  கவனத்தில் கொள்வதற்கு தயாராக இல்லாமையாலும், அவர்களை சிதறடித்து சிறைக்கு அனுப்பியதாலும் ஏற்பட்ட நட்டத்தை அண்மையில் நாங்கள் கண்கூடாக பார்த்தோம்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அசம்பாவிதங்கள் யாரின் தவறினால் ஏற்பட்டது என்று நாம் புதிதாக கூற வேண்டிய அவசியமில்லை.

இராணுவத்தினர் அவர்களுக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்யவில்லை. எங்களுக்காக இந்த நாட்டு மக்களுக்காக, தமது தேசத்திற்காகவே அதனைச் செய்தார்கள்” என்று தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7