
திருவொற்றியூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
”சிகிச்சை வெற்றியளித்து நோயாளி இறந்ததை போல நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் அ.தி.மு.க.விலிருந்த அமைச்சர்கள் தமிழ் மக்களுக்கு தேவையான பல அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றியிருந்தார்கள்.
ஆனால் தற்போது தி.மு.க. எதிரணியில் உள்ளது. இருப்பினும் அவர்கள் எந்த வகையில் தமிழ் நாட்டுக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பார்கள் என்று தெரியவில்லை.
இதேவேளை மக்கள் மோடியை தோற்கடித்து விட்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை தமிழ்நாடும், தமிழக மக்களும்தான் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள்” என பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
