
அத்துடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் அவர் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்த விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிலையில், குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் இடம்பெற்ற மெட்காலா நிகழ்வில் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவர் நிக் ஜோன்ஸுடன் கலந்துகொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், பலரால் விமர்சிக்கப்பட்டது.
அந்த ஒளிப்படத்தில் மம்தா பானர்ஜியின் முகத்தை பதிவேற்றம் செய்து பா.ஜ.க நிர்வாகியான பிரியங்கா சர்மா வெளியிட்டிருந்தார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
