(முர்ஷீத்)
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் வழிகாட்டலில், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் இ.இன்பராஜன் தலைமையில் செம்மண்ணோடை, மாவடிச்சேனையில் அமைந்துள்ள உணவகங்கள் மற்றும் பழக்கடைகள் என்பன பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்போது பாவனைக்கு உதவாக உணவுப் பொருட்கள் மற்றும் பழங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதுடன், வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.
நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் நோன்பு திறக்கும் போது உட்கொள்ளும் உணவுகள் சுகாதார முறையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவினர் குறித்த பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
குறித்த பரிசோதனையின் போது பொது சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.
