
மென் வலதுசாரி ஐரோப்பிய மக்கள் கட்சி பெரிய கூட்டணியாக கருதப்பட்டதுடன், அவர்கள்தான் வெல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தாராளவாதிகள், பசுமைவாதிகள் மற்றும் தேசியவாதிகளுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தேர்தல் இடம்பெறுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதன்போது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சட்டங்களை இயற்றுவதே ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பணியாக இருக்கும்.
அதேவேளை, பிறெக்ஸிட் உடன்படிக்கை காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து மார்ச் 29 ஆம் திகதி பிரித்தானியா விலகியிருக்க வேண்டும். ஆனால், விலகுவது தொடர்பான ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காத காரணத்தால், இந்த தேர்தலில் பிரித்தானியாவும் பங்கேற்கும் சூழ்நிலை உருவானது.
அத்துடன், இந்தத் தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக குடியேற்றம், பொருளாதார பிரச்சனை மற்றும் பருவநிலை மாற்றம் என்பன தாக்கம் செலுத்தியுள்ளன.
