
தேசிய தேர்தல் ஆணையகத்தினால் கணக்கிடப்பட்ட வாக்கெடுப்புகளில் 96 சதவீத வாக்களிப்பு நிலையங்களில் பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் சட்டம் மற்றும் நீதிக் கட்சி சிறந்த பெறுபேறுகளை வௌிப்படுத்தியுள்ளது.
பொது அல்லது ஐரோப்பிய ஒன்றிய தேர்தலின் போது 46 சதவீத வாக்குகளை அந்த கட்சி பெற்றுள்ளது. அந்த கட்சி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் 31.8 சதவீத வாக்குகளையும், 2015 நாடாளுமன்ற தேர்தலில் 37.6 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்து.
அதேவேளை, எதிர் ஐரோப்பிய கூட்டணி, ஐரோப்பிய ஆணையகத் தலைவர் டொனால்ட் டஸ்க் தலைமையிலான கட்சி, இடது சாரி மற்றும் கிராமப்புற அரசியல்வாதிகள் இரண்டாம் நிலையாக 37. 9 சதவீத வாக்குகளை பெற்றனர். இதனிடையே, வாக்களிப்புகள் 45.4 சதவீதமாக இருந்தது, இது போலந்தில் ஓர் ஐரோப்பிய தேர்தலுக்கான சாதனையாக கருதப்படுகின்றது.
